ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
'லவ் டுடே, டிராகன் படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள படம் 'டியூட்'. அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ள இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த டியூட் படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளார்கள். அதில் ஆக்சன், ரொமான்ஸ், காமெடி கலந்த கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக, பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ஆகிய இருவரும் ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்துகிறார்கள். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகிறது. ஆனால் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார் மமிதா பைஜு. அதையடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
குறிப்பாக முந்தைய படங்களை விட இந்த படத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த உடம்ப வச்சிக்கிட்டு சண்டைக்கு போறியே உன்னால 10 பேர் வந்தால் சமாளிக்க முடியுமா? என்று மமிதா பைஜூ கேட்க, 100 பேர் வந்தாலும் என்னால அடி வாங்க முடியும் என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் இந்த படம் ஒரு பக்கா கமர்சியல் கதையில் உருவாகி இருக்கிறது.