‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் |

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சமீப காலங்களில் பல சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது தோழியும் நடிகையுமான நக்ஷத்திரா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நக்ஷத்திரா பிரச்னையில் இருப்பது போலவும், அவளை இப்போதே மீட்காவிட்டால் சித்ராவுக்கு நடந்தது போல் தவறாக ஏதாவது நடந்துவிடும் என்றும் குண்டை தூக்கி போட்டார்.
இந்நிலையில், நடிகை நக்ஷத்திரா இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்ட வீடியோவில், 'எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். ஸ்ரீநிதி பேசியதற்கு அன்றே நான் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவள் பேசியது சோஷியல் மீடியாவில் இந்த அளவுக்கு வைரலாகும் என்று நினைக்கவில்லை. அவள் டிப்ரஷனில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாள். சமீப காலங்களில் அவள் பதிவுகளை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும்.
ஸ்ரீநிதி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என் மேல் உள்ள அன்பினால் பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பி விசாரிக்கிறீர்கள், கால் செய்து பேசுகிறீர்கள். ஆனால், ஸ்ரீநிதி சொல்லியது போல் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி' என்று கூறியுள்ளார். இவ்வாறாக கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வந்த ஸ்ரீநிதி கிளப்பிய சர்ச்சைக்கு நக்ஷத்திரா முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டார்.




