பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்ரம் நடித்த சேது படத்தில் நடித்தவர் அபிதா. அதன்பின் ஓரிரு படங்களில் நடித்தவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சீரியல் பக்கம் வந்தார். அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து சாதனை படைத்த சீரியல்களில் 'திருமதி செல்வமும்' ஒன்று. இதில் ஹீரோவாக சஞ்சீவும், ஹீரோயினாக அபிதாவும் நடித்திருந்தனர். ஒரு சாதரண மெக்கானிக் மற்றும் மனைவிக்கு இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அபிதாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு அவரும் கணவர், குழந்தை என கேரளாவில் செட்டி ஆகிவிட்டார்.
இந்நிலையில், அபிதா தற்போது ஜீ தமிழ் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் 'திரியாணி' என்ற தெலுங்கு சீரியல் ரீமேக் செய்யப்பட உள்ளது. அந்த தொடரின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அபிதாவை நடிக்க முயற்சி எடுத்து வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் என்றும் சீரியல் வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.