2026ல் துவங்கும் தனுஷின் மூன்று படங்கள் | ‛திருச்சிற்றம்பலம்' இயக்குனருடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன் | காதல் குறித்து கிர்த்தி சனோன் வெளியிட்ட தகவல் | 2026ல் ஐந்து ஹிந்தி படங்களில் நடிக்கும் தமன்னா | பெரிய படங்களின் வசூலை சுட்டிக்காட்டிய சிம்ரன்! | கைகூப்பி கேட்கிறேன்... ஆதரிக்காதீங்க : ஸ்ரீலீலா | சிம்புவின் 51வது படத்தை தயாரிப்பதை உறுதிப்படுத்திய அர்ச்சனா கல்பாத்தி | தோழிகளுடன் இலங்கைக்கு டூர் சென்ற ராஷ்மிகா மந்தனா | பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்து அர்ச்சனா கல்பாத்தி தந்த அப்டேட்! | தனுஷ் - வினோத் கூட்டணி படத்தின் புதிய அப்டேட்! |

பிக்பாஸ் சீசன் 8ல் சின்னத்திரை பிரபலமான தீபக் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். சமீபகாலமாக பிக்பாஸ் வீட்டில் இவருடைய கேம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சில சமயங்களில் விஜய் சேதுபதியிடமே துணிச்சலாக தனது கருத்தை சொல்லிவிடுகிறார். அதேசமயம் சிலர் தீபக் பாரபட்சமாக பழகுகிறார், பாகுபாடு காட்டுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தமிழும் சரஸ்வதியும் தொடரில் அவருடன் இணைந்து நடித்த நக்ஷத்திரா தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'தீபக் உண்மையான ஜெண்டில் மேன். மனிதர்களை சமமாக பார்ப்பவர். எல்லோரையும் அவர் சமமாக தான் நடத்துவார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்துகள் சொல்லியது கிடையாது. ஆனால், தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் இப்போது இதை கூறுகிறேன்' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.