தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை | வசூலைக் குவிக்கும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | டிசம்பர் 19ல் ‛கொம்புசீவி' ரிலீஸ்: இதிலாவது ஜெயிப்பாரா விஜயகாந்த் மகன்? | தடை நீங்கியது : டிசம்பர் 12ல் 'அகண்டா 2' ரிலீஸ் அறிவிப்பு | நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியல் மூலம் அறிமுகமானவர் மேக்னா வின்சென்ட். ஏற்கெனவே பல மலையாள சீரியல்களில் நடித்திருந்த அவர், 'தெய்வம் தந்த வீடு' தொடரின் மலையாள பதிப்பிலும் நடித்தார். அதை தொடர்ந்து 'பொன்மகள் வந்தாள்' சீரியலிலும் நடித்தார். 'கயல்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார்.
பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் கேரளாவிற்கே திரும்பி சென்று விட்டார். தற்போது அவர் மலையாள சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும், தற்போது இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சீரியலை விட விவசாயம் அதிக லாபம் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: இப்போது சொந்த ஊரில் இருக்கிறேன். அவ்வப்போது நடித்துக் கொண்டிருந்தாலும், இயற்கை விவசாயத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். வீட்டுக்குத் தேவையான காய்கறிகளுக்காகத்தான் இதை தொடங்கினேன். கொஞ்சம் பணம் சேர்ந்ததும், எங்க ஊர்லயே ஒரு ஆறு இருக்கு. அந்த ஆற்றின் கரையில் கொஞ்சம் நிலம் வாங்கி 'மேக்னாஸ் பார்ம்'னு தனி பண்ணையே தொடங்கி விட்டேன்.
காய்கறிகள், பழங்கள், கீரை பயிரிடுவதோடு கால்நடைகளும் வளர்க்கிறோம். இப்போது மீன் பண்ணையும் உருவாக்கி இருக்கிறேன். என்கிறார் மேக்னா.