இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'மத கஜ ராஜா' படம் 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில், பிரச்னைகள் எல்லாம் முடிந்து நேற்று (ஜன.,12) வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்த நிலையில், இதேபோல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் பல படங்களும் வெளிவர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதில் முக்கியமாக, நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு, நிதி பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக பலமுறை தடைப்பட்டது. இருந்தாலும், தடைகளை தாண்டி, படப்பிடிப்பையும் நடத்தி முடித்தார் கவுதம் வாசுதேவ் மேனன். இதன் ரிலீஸ் தேதிகளை பலமுறை அறிவித்து பின்னர் வெளியிட முடியாமல் ஒத்திவைத்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே மலையாளத்தில் நடிகர் மம்முட்டி தயாரித்து நடித்துள்ள 'டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' என்ற திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் துருவ நட்சத்திரம் படம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கவுதம் வாசுதேவ் மேனன், ''துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக சூழ்நிலையில் இருக்கும் போது யாரும் எனக்கு உதவவில்லை. யாரும் அதைப்பற்றி கண்டுக்கொள்ளவில்லை. ஒரு திரைப்படம் வெற்றிப்பெற்றால் அதை ஓ அப்படியா என கேட்பார்கள். அதற்கு யாரும் சந்தோஷம் அடைய மாட்டார்கள். தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் லிங்குசாமி ஆகிய இருவர் மட்டுமே எனக்கு கால் செய்து பேசினர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு மற்றும் அவர்கள் காட்டும் அன்பு மட்டுமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது,'' எனக் கூறியுள்ளார்.