பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
சம்பத் நந்தி இயக்கத்தில் கோபிசந்த், தமன்னா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான தெலுங்கு படம் 'சீட்டிமார்'. பெண்கள் கபடி விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயம் ரவி நாயகனாக அறிமுகமான 'ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தெலுங்கிலும் சில படங்களில் வில்லனாக நடித்து அதன்பின் கதாநாயகனாக உயர்ந்தார்.
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு ஆந்திரா, தெலங்கானாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதிலிருந்து பெரிய அளவில் ரசிகர்கள் வரவில்லை. ஆனால், 'சீட்டிமார்' படத்திற்கு படம் வெளியான கடந்த மூன்று நாட்களிலும் நல்ல கூட்டம் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். படமும் கமர்ஷியலாக இருப்பதால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுவிடும் என்கிறார்கள்.
மேலும், 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் இந்தப் படத்தின் நாயகன் கோபிசந்துக்கு வாழ்த்து தெரிவித்ததும் படத்திற்கு உதவிகரமாக அமைந்துள்ளது. “சீட்டிமார்' படத்தின் மூலம் எனது நண்பன் கோபிசந்த் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளார். அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன். கொரானோ இரண்டாவது அலைக்குப் பிறகு நெருக்கடியான சூழலில் இந்த பெரிய படத்தை வெளியிட்ட படக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள்,” என்றும் தெரிவித்துள்ளார்.