லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவின் சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் தமிழைத் தவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நேரடிப் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், கடந்த பல வருடங்களாக தமிழில் மட்டுமே நடித்து வருகிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குத் தயாரிப்பாளர்களின் பான்-இந்தியா படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும் நாராயண்தாஸ் நரங், சுனில் நரங், பரத் நரங், புஸ்குர் ராம்மோகன் ராவ் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
'விக்ரம், இந்தியன் 2' படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள பான்-இந்தியா படத்தைத் தயாரிக்க அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தான் தற்போது நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்து வரும் 'லவ் ஸ்டோரி' படத்தைத் தயாரித்து முடித்துள்ளார்கள். அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தையும் தயாரிக்கப் போகிறார்கள்.
தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து சில பிரம்மாண்டமான படங்களைத் தயாரிக்கப் போகிறார்கள். விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அப்படி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகச் சொல்கிறார்கள்.