ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சுராஜின் கத்திச்சண்டையில் மறுபடியும் காமெடி வேடத்துக்கு திரும்பினார் வடிவேலு. ஆனால், அதையடுத்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் ரெட் கார்டு போடப்பட்டு, வடிவேலு படங்களில் நடிக்க மறைமுக தடை விதிக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடையை விலக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கும் வடிவேலு, தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம் தான். அடுத்து இரண்டு படங்களில் நாயகனாக நடித்த பின் காமெடி வேடங்களுக்கு திரும்புவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தி சேனல் ஒன்று வடிவேலுவுக்கு வாழ்த்து சொல்ல போனில் தொடர்பு கொண்ட போது அவரிடம் 'அரசியலுக்கு முன்ன மாதிரி வருவீங்களா ' என்று கேட்கப்பட்டதற்கு கொஞ்சம் கோபமான வடிவேலு, பேசிட்டு இருக்கும் போது, உள்ள குச்சிய விடக்கூடாது, தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.