100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஓடு ஓடு ஆடு' பாடல் நேற்று காலை 11 மணிக்கு 5 மொழிகளில் யு டியூபில் வெளியிடப்பட்டது.
24 மணி நேரத்தில் இந்தப் பாடல் அதிகபட்சமாக தெலுங்கில் 8.2 மில்லியன் பார்வைகள், தமிழில் 1.9 மில்லியன், மலையாளத்தில் 7 லட்சம், கன்னடத்தில் 1.2 மில்லியன், ஹிந்தியில் 4.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 5 மொழிகளிலும் சேர்த்து 16 மில்லியன்களுக்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இது இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நட்பு பாடலுடன் ஒப்பிடும் போது குறைவுதான். 24 மணி நேரத்தில் 'நட்பு' பாடல் 5 மொழிகளிலும் சேர்த்து 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
'நட்பு' பாடல் தெலுங்கில் 7.1 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றது. அதே சமயம், 'புஷ்பா' பாடல் அதை விட 1.1 மில்லியன் பார்வைகளை அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளது.
யு டியூப் டிரெண்டிங்கைப் பொறுத்தவரையில் 'புஷ்பா' பாடல் 2ம் இடத்தில்தான் உள்ளது. 'வலிமை' படத்தின் 'நாங்க வேற மாறி' பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.