தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் நடைபெற்ற பிரிமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினான். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தியேட்டர் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநில முதன்மைச் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
“படத்தின் பிரிமியர் காட்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதியின்றி நடிகரும், பார்வையாளர்களும் எப்படி கலந்து கொண்டனர். முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம். விசாரணை முழுமையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட வேண்டும். இறந்து ரேவதி குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியதன் காரணம் என்ன ?. ஆறு வாரங்களுக்குள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்,” என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.
இறந்த ரேவதி குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் தரப்பில் 1 கோடி ரூபாயும், இயக்குனர் சுகுமார் தரப்பில் 50 லட்ச ரூபாயும், தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.




