ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான கலை இயக்குனர் தோட்டா தரணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். குறிப்பாக ‛நாயகன்' படத்தில் வரும் தாராவி செட், காதலர் தினத்தில் வரும் இன்டர்நெட் கபே, சிவாஜி படத்தில் வரும் பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கான செட் போன்றவை தத்ரூபமாக இவரது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இதுதவிர பல்வேறு படங்களில் இவரது கலை இயக்க பங்களிப்பு பெரிதும் பேசப்பட்டது. தேசிய விருது, பல்வேறு மாநில திரைப்பட விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் கலை துறையில் இவரது சேவையை பாராட்டி பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பின் சார்பில் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவ., 13ல் நடக்கும் விழாவில் பிரான்ஸ் தூதர், தரணி இந்த விருதை வழங்குகிறார். அன்றைய தினம் தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இதற்கு முன் செவாலிய விருதை தமிழ் சினிமாவில் நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.