அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகராக லோகேஷ் கனகராஜ் | என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' |

தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் ஸ்ரீலீலாவும், பாக்யஸ்ரீயும் தமிழுக்கு வருகிறார்கள். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா நடிக்கும் 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார் ஸ்ரீலீலா. பொங்கலுக்கு படம் ரிலீஸ். துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா' படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைக்கிறார் பாக்யஸ்ரீ.
தமிழில் கொடிகட்டி பறந்த நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது. ராஷ்மிகா மந்தனா அடுத்த ஆண்டு திருமணம் செய்யப்போகிறார். சில மலையாள ஹீரோயின்கள் மட்டுமே தமிழில் அதிக படங்களில் நடிக்கிறார். ஆகவே, அந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஸ்ரீலீலாவும், பாக்யஸ்ரீயும் ஆசைப்படுகிறார்களாம்.
பராசக்தி படம், 1960, 70 கால கட்டத்தில் நடக்கிறது. அதனால் ஸ்ரீலீலாவுக்கு மார்டனாக, கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பில்லை. பாக்யஸ்ரீ நடிக்கும் காந்தா படம், 1950களில் நடக்கிறது. ஆகவே, இருவரும் அடுத்து அதிரடி கவர்ச்சி படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறார்களாம். காந்தா படத்துக்காக தமிழ் கற்று இருக்கிறார் பாக்யஸ்ரீ, பராசக்தி படப்பிடிப்பில் ஸ்ரீலீலாவும் தமிழ் படித்து வருகிறாராம்.