துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
ஐதராபாத்: புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 என்ற படம் அண்மையில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது.
புஷ்பா 2 படம் வெளியாகும் முதல்நாளில் நடந்த சிறப்பு காட்சிக்கு தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் பிரிமியர் ஷோவுக்கு வந்தபோது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண், தமது 9 வயது மகனுடன் கூட்டத்தில் சிக்கினார். ரேவதி உயிரிழந்துவிட, மகன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெரும் பரபரப்பான இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் ஜாமினில் விடப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தின் அடுத்த அதிர்ச்சியாக சிகிச்சையில் இருந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுவன் சேர்க்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த், தெலுங்கானா சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டியானா உள்ளிட்டோர் சென்றனர். அங்கு சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழுவிடம் பேசினர்.
பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. எனவே அவர் குணம் அடைய நீண்ட காலம் பிடிக்கும். சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிறுவன் மருத்துவமனையில் உள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஏற்கனவே சிக்கலில் உள்ள நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது பெரும் நெருக்கடி ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.