தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

ஐதராபாத் : புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சியில் பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் பலியான சம்பவம் தொடர்பாக இப்பட நாயகன் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கத்தில் இவர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. 6 நாட்களில் 1000 கோடி வசூலைக் கடந்து இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை இப்படம் நிகழ்த்தியது.
இப்படத்தின் பிரீமியர் காட்சி படம் ரிலீஸிற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெற்றது. அப்போது ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 39 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அத்தியேட்டரின் உரிமையாளர், மேனேஜர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை அல்லு அர்ஜுன் அணுகி இருந்தார். இந்தச்சூழலில் அல்லு அர்ஜுனை ஐதராபாத் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த விஷயம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே மரணம் அடைந்த பெண்ணிற்கு அல்லு அர்ஜுன் சார்பாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
14 நாள் கஸ்டடி
கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூன், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இடைக்கால ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.




