வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
நடிகர் அஜித்துடன் 'துணிவு' படத்தில் நடித்திருந்தார் நடிகை மஞ்சு வாரியர். தற்போது விஜய் சேதுபதியின் ஜோடியாக இவர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் நாளை ரிலீசாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மஞ்சுவாரியர், நடிகர் அஜித் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது: அஜித்குமார் சார் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக பேசுவார். எனக்கு சிறிய வயதில் இருந்தே பைக் ஓட்ட வேண்டும் என்பது ஆசை. நான் எனது பக்கெட் லிஸ்டில்கூட இதுபற்றி எழுதி வைத்திருக்கிறேன்.
அஜித் சாருக்கு பைக் மீதிருக்கும் ஆர்வம் என்னையும் எனது ஆசை மீது ஏதாவது செய்ய வேண்டுமென தூண்டியது. அவருக்கு பிடித்ததை செய்ய நேரம் ஒதுக்கி செய்கிறார். நமக்கு பிடித்ததை செய்ய அஜித் சாரைப் பார்த்து நானும் எங்கேயோ ஊக்கமடைந்திருக்கிறேன். நமக்கு பிடித்ததை செய்ய அவரும் ஒரு காரணமாக இருக்கிறார். பைக் நம்மை மன்னிக்காது. நாம் சரியாக பயன்படுத்தினால் அதுவும் சரியாக வேலை செய்யும் என அஜித் கூறியுள்ளார். இவ்வாறு மஞ்சுவாரியர் பேசியுள்ளார்.