நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
40 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவையும் விட்டு ஒதுங்கியவர், கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் மறுபிரவேசம் செய்து அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமீபத்தில் நடிகைகள் மீனா, ஷோபனா போன்றவர்கள் வயதான பின்னும் கூட மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு ஜோடியாக நடிப்பது போல தானும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை சாந்தி கிருஷ்ணாவுக்கு இருக்கிறது. அதை சமீபத்திய பேட்டிகளிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இப்போதும் மம்முட்டி, மோகன்லாலுக்கு ஜோடியாக நான் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நிவின்பாலி, பஹத் பாசில் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டதாலோ என்னவோ மோகன்லால், மம்முட்டி ஆகியோர் என்னை கண்டு கொள்வதில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.