கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் | சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு | கவுரி கிஷனுக்கு இதுவரை குரல் கொடுக்காத திரிஷா | 25வது நாளை கொண்டாடிய பைசன் | மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா | மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம் | கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா | பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல் | நடிகையானதை தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட விஸ்மாயா மோகன்லால் |

தெலுங்கில் முன்னணி நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் வரும் செப்டம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கும் படம் “தே கால் ஹிம் ஓஜி”. இந்த படத்தை இயக்குனர் சுஜித் இயக்கியுள்ளார். பிரபாஸ் நடித்த 'சாகோ' படத்தை இயக்கியவர் தான் இவர். இந்த நிலையில் ஓஜி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாண் கலந்து கொண்டார். இவர் இப்போது ஆந்திராவில் துணை முதல்வரும் என்பதால் அதிக அளவிலான பாதுகாவலர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.
இந்த படத்தில் அவர் வால் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். அதனால் அதை பிரகடனப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு கையில் வாளுடன் வருகை தந்தார் பவன் கல்யாண். அப்படி அவர் நடந்து வந்த சமயத்தில் ஏதேச்சையாக கையில் இருந்த வாளை பின்பக்கமாக சுழற்றினார் அப்படி அவர் சுழற்றுவார் என எதிர்பாராமல், அவரைப் பின் தொடர்ந்து வந்த பாதுகாவலர் ஒருவரின் முகத்தின் வெகு அருகில் அந்த வாள் கிழிப்பது போல் சென்றது. நல்ல வேளையாக சுதாரித்த அந்த பாதுகாவலர் சற்று பின்னோக்கி அடி எடுத்து வைத்ததால் வாள் வீச்சிலிருந்து தப்பித்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




