புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்த விவேக் சில தினங்களுக்கு முன்பு மறைந்தார். 1987ம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் படம் மூலம் அறிமுகமானவர். கடந்த 34 வருடங்களாகத் திரையுலகத்தில் இருந்தாலும் கமல்ஹாசனுடன் மட்டும் ஒரு படத்தில் கூட நடிக்காமல் இருந்தார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 படம் ஆரம்பமான போது, அப்படத்தில் விவேக் நடிப்பாரா என்பது குறித்து ஒரு விவாதம் எழுந்தது. அந்த சமயத்தில் அது குறித்து டுவிட்டர் பதிவொன்றில், “எனது பள்ளி நாட்களில் இருந்தே நான் கமல்ஹாசன் சாரின் ரசிகன். 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படம் வந்த போது நான் சாந்தோம் ஹைஸ்கூலில் படித்து வந்தேன். அவருடன் பணியாற்றுகிறேனோ இல்லையோ நான் அவரது ரசிகன். கதைக்கு நான் தேவைப்பட்டால் இயக்குனர் ஷங்கர் என்னை நிச்சயம் அழைப்பார்,” என்று பதிவிட்டிருந்தார்.
அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து, “நிகழும் வரை சொப்பனம், நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்க்கு என் அன்பு, ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி, லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள்,” என்று டுவீட்டில் குறிப்பிட்டு இந்தியன் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.
அதற்குப் பிறகு அவர் இந்தியன் 2 படத்தில் நடித்தார் என தற்போது விசாரித்ததில் தெரிய வருகிறது. படத்தில் விவேக் நடிக்க வேண்டிய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டதா, அதற்கு அவர் டப்பிங் பேசி விட்டாரா என்பதை படக்குழுதான் அறிவிக்க வேண்டும். இந்தியன் 2 படம் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளதால் அது பற்றி யாரும் தெரிவிக்க மாட்டார்கள்.
விவேக்கின் காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டிருந்தால் அவற்றை நீக்க வாய்ப்பில்லை. அவர் டப்பிங் பேசவில்லை என்றாலும் வேறு யாரையாவது வைத்து பேசிக் கொள்ளலாம். ஆனால், அவர் காட்சிகள் முழுமையாக படமாக்கப்படவில்லை என்றால்தான் சிக்கல்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகர் விவேக்கை, தன் முந்தைய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த ஷங்கர், விவேக்கின் ஆசையை எப்படியும் நிறைவேற்றி வைப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி செய்தால் அது விவேக்கிற்கு ஒரு சிறந்த மரியாதை செய்தது போல இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
தன் அபிமான நடிகர் கமல்ஹாசனுன் நடித்த படத்தைப் பார்க்க மறைந்த விவேக்கால் முடியவில்லை என்றாலும் அவரது குடும்பத்தினராவது அதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள்.