பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். தற்போது கிஸ், மாஸ்க் என இரு படங்கள் கவின் நடிப்பில் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இதுதவிர அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி வருகிறார். தண்டட்டி படத்தை இயக்கும் ராம் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் கவினின் 9வது பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கென் ராய்சன் இயக்குகிறார். இதில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஓப்ரோ இசையமைக்கிறார். தின்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்களும், படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.