ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஜூன் 5ம் தேதி வெளியான படம் ‛தக் லைப்'. தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் இத்தனை பேர் இணைந்தும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'இந்தியன் 2' படத்தை விடவும் மோசமாக வசூலித்ததாகவும் தகவல்.
படம் வெளிவருவதற்கு முன்பு எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி ரிலீஸ் என பெருமையாக அறிவித்தார்கள். அதை தியேட்டர் அதிபர்களும் வரவேற்றனர். ஆனால், படம் தோல்வியடைந்த காரணத்தால் வழக்கம் போல நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி முடிந்த அளவு நஷ்டத்தை ஓடிடி வியாபாரத்தில் தவிர்த்தார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. உலக அளவிலும், இந்திய அளவிலும் அதிகம் பார்க்கப்படும் டாப் 10 படங்களில் தொடர்ந்து இந்தப் படம் இடம் பிடித்து வருகிறது. தியேட்டர்களில் படத்தைப் பார்க்காதவர்கள் பலரும் ஓடிடி தளத்தில் பார்த்து வருகின்றனர். தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு கடுமையான விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு வந்தன. ஆனால், ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகு அப்படி எதுவும் வரவில்லை.
அதேசமயம், 'இந்தியன் 2' படம் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகும், ஒடிடி வெளியீட்டிற்குப் பிறகும் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
கமல்ஹாசனின் அடுத்த படமாக எந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்பது இன்னும் வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளது. அடுத்து ஒரு வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால் அவரது 'மூவ்' என்ன என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.