அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை |

தக் லைப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் நடிக்க போகிறார் சிம்பு. அவர் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் எட்டாம் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் புரொமோ வீடியோ வெளியானதில் இருந்தே சிம்பு ரசிகர்கள் மத்தியில் அரசன் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு எகிறி நிற்கிறது.
இந்நிலையில் சிம்புவின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டான புகைப்படத்தை வெளியிடுமாறு அவரிடம் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது நீண்ட தலை முடியுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சிம்பு. அதோடு, தனது சோசியல் மீடியா பக்க டி.பியிலும் அரசன் படத்தின் புதிய புகைப்படத்தை மாற்றி உள்ளார்.




