டிரைலரைப் பார்த்தால் 'மிஸ்டர் பாரத்' மாதிரிதான் இருக்கு? | 'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள் | ஆஸ்கர் தேர்வுக்கு ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையா ? | குஷி பார்ட் 2 உருவாகுமா? விஜய் மகன், ஜோதிகா மகள் நடிப்பார்களா? | ஏழு பெண்களின் பிரச்னைகளை பேசும் விதமாக ‛கமல் ஸ்ரீதேவி' பெயரில் வெளியாகி உள்ள படம் | இப்போதும் மனதை அழுத்தும் சோகம் ; அனுபமா பரமேஸ்வரன் | பொதுவெளியில் விவாதத்தை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோகன்லால் பேசிய வார்த்தைகள் | பத்து வருட பயணத்தில் முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் சந்தோசத்தில் வர்ஷா பொல்லம்மா | மார்கோ 2ம் பாகத்தில் யஷ் நடிக்கவில்லை ; அவரது டீம் தகவல் | குடியிருந்த கோயில், பாண்டி, வாரிசு - ஞாயிறு திரைப்படங்கள் |
10 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானவர் விவேக் பிரசன்னா. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அவைகளில் பெரும்பாலனவை குணசித்ர வேடங்கள் அல்லது காமெடி வேடங்கள். அவர் தற்போது நாயகனாக நடிக்கும் படம் 'ட்ராமா'. ஆர்.எஸ்.ராஜ்பரத் இசை அமைக்கிறார், அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தை டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிக்கிறார், தம்பிதுரை மாரியப்பன் இயக்குகிறார். விவேக் பிரசன்னாவுடன், பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்கள். மெடிக்கல் கிரைம் திரில்லர் ஜார்னரில் படம் தயாராகி வருகிறது.