22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
இளையராஜாவின் பாடல்கள் சர்வதேச அளவிலான பல சாதனைகளை செய்திருக்கிறது. அவரது சிம்பொனி இசை உலக புகழ் பெற்றது. அந்த வரிசையில் அவர் 'ராம் லக்ஷ்மன்' என்ற படத்திற்கு இசை அமைத்த 'நான்தான் ஒங்கப்பண்டா நல்ல முத்து பேரண்டா வெள்ளி பிரம்பெடுத்து விளையாட வாரண்டா...' என்ற பாடலின் இசை கோர்வை லண்டனின் நடந்த ஒலிப்பிக் போட்டியில் ஓப்பனிங் பாடலாக ஒலித்தது.
இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு யானையுடன் நடித்தார். கமல்ஹாசன் குடும்பம் ஒரு யானை வளர்க்கும், அந்த யானை குட்டி போடும் அன்றைய தினமே கமல்ஹாசனும் பிறப்பார். இதனால் கமல்ஹாசனுக்கு ராம் என்றும் யானைக்கு லக்ஷ்மண் என்றும் பெயர் சூட்டி வளர்ப்பார்கள். இவருவமே அண்ணன், தம்பி போன்றே வளர்வார்கள். இருவருக்குமே வில்லன்களால் பிரச்சினை வரும்போது எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
விலங்குகளை வைத்து படம் எடுப்பதில் முன்னிலை வகித்த தேவர் பிலிம்ஸ் இதை தயாரித்தது. அதன் ஆஸ்தான இயக்குனராக தியாகராஜன் இயக்கினார். எம்.என்.நம்பியார், பண்டரிபாய், அசோகன், சுருளிராஜன் உள்பட பலர் நடித்திருந்தனர். படம் எதிர்பார்த்தபடியான வரவேற்பை பெறவில்லை. ஆனால் பாடல் ஒலிம்பிக் வரை சென்றது.