வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. தமிழகத்தில் மட்டும் 150 கோடி வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்ததாகச் சொன்னார்கள். ஆனால், மொத்தமாக பட்ஜெட்டுடன் சேர்த்து கணக்கிட்டால் குறைந்த நஷ்டம் என்றும், குறைந்த லாபம் என்றும் தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகத்திலும் மாறி மாறி சொல்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத் தயாரிப்பின் மூலம் தமிழில் நுழைந்தது. ஒரு தமிழ்ப் படத் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது. அதன்பின் என்ன நடந்ததோ தயாரிப்பு நிறுவனம் மாறியது.
அஜித் - மைத்ரி நிறுவனம் மீண்டும் அடுத்த படத்தில் இணையப் போகிறார்கள் என்றுதான் தகவல்கள் வெளியாகின. ஆனால், படம் வெளியாகி மூன்று மாதங்கள் ஆன பிறகும் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. அஜித்தின் அடுத்த படத்தை மைத்ரி நிறுவனம் தயாரிக்கப் போவதில்லை என்றுதான் சொல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த லாபம் வராத காரணத்தால் இந்த முடிவாம். அதனால், தமிழில் உள்ள சில முன்னணி நிறுவனங்களுடன் அஜித் தரப்பில் பேசி வருகிறார்களாம். அவர்கள் கேட்கும் சம்பளம் 200 கோடிக்கும் அதிகம் என்கிறது கோலிவுட் கிசுகிசு. இதனால்தான் அடுத்த பட அறிவிப்பு தள்ளிப் போகிறதாம்.