ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
விக்னேஷ் நடிக்கும் ரெட் பிளவர் பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசியதாவது, ‛‛இனி வருங்காலங்களில் ஒரு படம் வெளியாகும்போது முதல் 12 காட்சிகள், அதாவது முதல் 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தேவைப்பட்டால் தியேட்டருக்கு வெளியே எடுத்துக் கொள்ளட்டும் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் படம் பார்த்து அவர்களே சொந்தமாக ரிவுயூ கொடுக்கட்டும். சினிமாவை காப்பாற்ற இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ‛‛இன்னும் 2 மாதத்தில் என் திருமணம் நடக்கும். நடிகர் சங்க வளாகம் அதற்குள் தயாராகிவிடும். ஆகஸ்ட் 29ல் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளேன். நடிகர் சங்க கட்டட பணிகளை முடிக்க ஓடிக்கொண்டு இருக்கிறேன். இந்த பட ஹீரோ விக்னேஷ் கடும் உழைப்பாளி , அவர் வெற்றி பெற வேண்டும் என்றார்.
இதற்குமுன்பு ஆகஸ்ட் 29ல் எனக்கும் சாய் தன் ஷிகாவுக்கும் திருமணம் என்று விஷால் கூறியிருந்தார்.