நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் சிவா. அஜித்துடன் இணைந்து 'வீரம், வேதாளம், விஸ்வாசம்' என வெற்றிப் படங்களைக் கொடுத்தார். சூர்யா, சிவா இணையும் சூர்யாவின் 39வது படம் என்ற அறிவிப்பை 2019ம் வருடம் வெளியிட்டார்கள். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தை இயக்கப் போய்விட்டார் சிவா.
அதன்பின் சூர்யா, சிவா இணையும் படம் கைவிடப்பட்டது என்றெல்லாம் பேசினார்கள். இதனிடையே, 'அண்ணாத்த' படப்பிடிப்பு தாமதமாவதால் பழைய திட்டப்படி சூர்யா பட வேலைகளை சிவா ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்திலும் நடிக்கத் தயாராகி வருகிறார். இதில் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.