நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
சமீபத்தில் வந்த படங்களில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‛லோகா' படமும், ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‛காந்தாரா சாப்டர் 1' படமும் தமிழிலும் ஹிட். இந்த இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே தமிழ் படங்கள் அல்ல, டப்பிங் படங்கள். லோகா படக்குழுவும் சரி, காந்தாரா குழுவும் சரி, தமிழகம் வந்து படத்தை பற்றி பேசவில்லை. தமிழகத்தில் எங்கும் படத்தை புரமோட் செய்யவில்லை. படம் ஹிட்டானபின் நன்றி தெரிவிக்க வந்தது லோகா குழு. காந்தாரா அதை கூட செய்யவில்லை. ஆனாலும், இரண்டு படத்தையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
நல்ல படங்களுக்கு, சிறந்த கதைகளுக்கு பெரிய விளம்பரம் தேவையில்லை என்பதை இந்த படங்கள் உணர்த்தி உள்ளன. இதேபோல், கடந்த ஆண்டு வெளியான ‛மஞ்சம்மேல் பாய்ஸ்' படத்துக்கும், தமிழில் படக்குழு விளம்பரம் செய்யவில்லை. படம் ஹிட்டான பின்னரே சென்னை வந்து பேசினர். அதேபோல் தெலுங்கில் ஹிட்டான பவன்கல்யாணின் ‛ஓஜி' குழுவும், தென்னிந்தியாவில் ஹிட்டான ‛மகாஅவதார் நரசிம்மா' படக்குழுவும் சென்னையில் ஒரு ஈவன்ட் கூட நடத்தவில்லை. ஆனாலும், இந்த படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தது.