ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் நடித்த லூசிபர் மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்றது. இதனை பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவியும், மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் நயன்தாராவும் நடிக்கிறார்கள். இதனை சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சூப்பர்குட் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். மோகன் ராஜா இயக்குகிறார். தெலுங்கில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார் மோகன் ராஜா.
இந்த கதையில் மஞ்சு வாரியருக்கு அவ்வளவாக காட்சிகள் இருக்காது. இதனால் தெலுங்கில் இந்த கேரக்டரில் நடிக்கும் நயன்தாராவுக்கு காட்சிகளை அதிகப்படுத்தும் வகையில் கதையில் மாற்றம் செய்கிறார்கள். சிரஞ்சீவிக்கு நிகராக காட்சிகள் அவருக்கு வைக்கப்படுகிறதாம். இதற்கான கதை விவாதத்தில் இயக்குனர் மோகன் ராஜா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.