என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து, திருமணம் செய்தவர் நடிகை நயன்தாரா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களின் திருமணத்தை வைத்து ‛நயன்தாரா : பியாண்ட் தி பேரி டேல்' என்ற ஆவணப்படம் உருவாகி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது ‛நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தி இருப்பதாக கூறி, ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இதே ஆவணப்படத்தில் ‛சந்திரமுகி' படத்தின் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்க கோரி ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அந்த காட்சிகளை நீக்க வேண்டியும், ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இதுபற்றி அக்., 6க்குள் பதில் மனு தாக்கல் செய்ய ‛டார்க் ஸ்டுடியோ' நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.