என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தமிழில் ராட்சசன், மரகத நாணயம், ஓ மை கடவுளே, பேச்சுலர் போன்ற  படங்களைக் தயாரித்த நிறுவனம் ஆக்சிஸ் பிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் தில்லி பாபு கடந்த ஆண்டு இதே நாளில் மறைந்தார். இதனால் இந்நிறுவனம் பட தயாரிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.  இந்த நிலையில் நேற்று தில்லி பாபுவின் நினைவு தினத்தன்று அவரை நினைவுகூறும் வகையில் இந்நிறுவனம் தயாரிப்பில் தேங்கி நின்ற படமான 'மிடில் கிளாஸ்' படத்தை முதல் பார்வை உடன் அறிவித்துள்ளனர். 
அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். விஜயலட்சுமி நாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2 வருடங்களுக்கு முன்பு பூஜை நிகழ்வுடன் அறிவித்திருந்தனர். தில்லி பாபுவின் திடீர் மறைவால் தேங்கி நின்ற இப்படம் இவ்வருடம்  திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            