வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இயக்குனராக இருந்து தற்போது அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் சீமான். இவர் இயக்குனராக இருந்தபோது தனது படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்து புகார் கூறி வருகிறார். பல ஆண்டுகளாக இவர்களுக்கு இடையேயான மோதல் நீடித்து வருகிறது. கடைசியாக அவர் சீமான் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக் கொண்டு தான் வசிக்கும் பெங்களூருக்கே திரும்பி சென்று விட்டார்.
தற்போது சீமான் கட்சி நிர்வாகிகள் வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாக வந்த குற்றச்சாட்டின் பேரில் தீவிர சோதனைக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையில் நான் மீண்டும் வந்து சீமானின் மானத்தை வாங்குவேன் என்று விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : சீமான் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மீதான வழக்கை மூடி மறைத்து வெளியே உத்தமன் போல பேசுகிறார். இப்போது என்ஐஏ-விடம் என்ன விளக்கம் கொடுத்துள்ளார்? ஈழத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போதும், தலைவர் கொலை செய்யப்பட்ட போதும் சீமான் என்ன ஆட்டம் போட்டார் என்பதை நான் தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டேன்.
நான் தொடர்ந்த வழக்கு அப்படியே உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கும்போதுதான் எனது போனைக் கொடுக்க முடியும் என்கிறார்கள். சீமான் தரப்போ இந்த வழக்கை எடுக்கவே மாட்டார்கள் எனக் கூறுகிறார்கள். 14 வருடங்களுக்கு முன்பு நான் போட்ட வழக்கை எடுக்க வேண்டும் என நான் ஒவ்வொருவரிடமும் பிச்சை எடுக்க வேண்டுமா?
திரும்பவும் நான் சென்னை வர்றேன். இந்த முறை மீடியா முன்பு எல்லாத்தையும் சொல்கிறேன். சீமான் என்னிடம் எப்படி ஆட்டம் போட்டார், மதுரை செல்வத்தை வைத்து எப்படிப் பேசினார் என்று விளக்கி திரும்பவும் சீமான் மானத்தை வாங்குகிறேன். மாநில அரசும் காவல்துறையும் சீமானை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இனியும் சீமானை விடுவதாக இல்லை” என ஆவசேமாகப் பேசியுள்ளார் விஜயலட்சுமி.