Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஒரே படத்துடன் சினிமாவை விட்டு விலகிய விஜயலட்சுமி

16 ஜூலை, 2024 - 11:01 IST
எழுத்தின் அளவு:
Flashback:-Vijayalakshmi-left-cinema-with-only-one-film


புகழ்பெற்ற கிராமிய பின்னணி பாடகி விஜயலட்சுமி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாறு, அழகியல் நுண்கலைத் துறையின் நாட்டுப்புறக் கலை மையத்தின் பேராசிரியையாகப் பணிபுரிந்தவர். இவரது கணவர் முனைவர் நவநீத கிருஷ்ணணும் இதே துறையில் பேராசிரியராக விளங்கியவர். பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலை வடிவங்களை கண்டறிந்து அதனை கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை நிகழ்ச்சியாக நடத்தி வந்தார். நாட்டார் கலை வடிவங்களை ஒளி ஒலி நாடாக்களை சேகரித்து தமிழ் சமூகத்திற்கு அளித்தவர்.

தன்னை தேடி வந்த பல சினிமா வாய்ப்புகளை மறுத்தவர், 1990ல் வெளிவந்த 'புதுப்புது ராகங்கள்' என்ற ஒரே படத்தில் மட்டும் பாடகியாகவே நடித்துள்ளார். பாடகி கேரக்டர் என்பதால் நடிக்க ஒத்துக்கொண்டார். இந்த படத்தை ஆதவன் என்பவர் இயக்கி இருந்தார். ஆனந்த்பாபு, சித்தாரா, சரண்ராஜ், நாகேஷ், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அட்லியின் அடுத்த படத்தில் விக்ரம் - தனுஷ் நடிக்கிறார்களா?அட்லியின் அடுத்த படத்தில் விக்ரம் - ... 'செம்மீன்' இயக்குனர் தயாரித்த தமிழ்படம் 'செம்மீன்' இயக்குனர் தயாரித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)