இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பழம்பெரும் மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராமு காரியத். 'திரமாலா' என்ற படத்தை 1953ம் ஆண்டு விமல்குமார் மற்றும் பி.ஆர்.எஸ்.பிள்ளையுடன் இணைந்து இயக்கினார். 1954ஆம் ஆண்டில் 'நீலக்குயில்' படத்தை பி.பாஸ்கரனுடன் இணைந்து இயக்கி அறிமுகமானார். இந்த படம் மலையாளத்தின் முதல் சிறந்த படமாக கருதப்படுகிறது.
நீலக்குயிலுக்குப் பிறகு, மின்னாமினுங்; புத்ரன்; மூடுபடம்; பரதநாட்டியம், ஏழுராத்திரிகள், அபயம், மாயா, நெல்லு, த்வீபு, அம்முவின்றே ஆட்டின்குட்டி, மலங்காற்று உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அனைத்து படங்களுமே மலையாள சினிமாவின் முக்கியமான படங்களாக இப்போதும் பேசப்படுகிறது.
1985ம் ஆண்டு இவர் இயக்கிய 'செம்மீன்' படம் மலையாள சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. தமிழில் '16 வயதினிலே' படம் போன்று இப்போதும் செம்மீன்தான் நம்பர் ஒன் படமாக இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியான மது மற்றும் ஷீலா ஆகியோர் புகழின் உச்சிக்கே சென்றனர். செம்மீன் மலையாளத் திரையுலகின் திருப்புமுனையாக கருதப்படுகிறது. தகழி, சிவசங்கர பிள்ளையின் நாவலின் தழுவலான இப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் மலையாளத் திரைப்படமாகும். 1972ம் ஆண்டு தமிழில் 'கண்ணம்மா' என்ற படத்தை தயாரித்தார். இதில் முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். லட்சுமணன் என்பவர் இயக்கி இருந்தார். பாடல்கள் வெற்றி பெற்றபோதும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.