ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பெண்கள்தான் விதவிதமான ஹேர்ஸ்டைல் செய்ய முடியுமா, ஆண்கள் செய்ய முடியாதா என்ற கேள்வி ஆண்களிடம் எப்போதும் இருக்கும். அந்தக் காலத்தில் 'கிராப்' ஹேர்ஸ்டைல் மட்டும்தான் ஆண்களுக்கான பொதுவான ஹேர்ஸ்டைலாக இருந்தது. அதன் பின் 80களின் துவக்கத்தில் 'ஸ்டெப் கட்டிங்', பிற்பகுதியில் 'டிஸ்கோ கட்டிங்', 90களில் 'பன்க்' ஆகியவை பிரபலமாக இருந்தன. 90களில் சிறுவர்களாக இருந்து அந்த 'பன்க்' ஹேர்ஸ்டைலை ரசித்த சிலர்தான் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கிறார்கள்.
பிரவீண் காந்த் இயக்கத்தில் 1997ல் வெளிவந்த 'ரட்சகன்' படத்தில் அந்த 'பன்க்' ஹேர்ஸ்டைலில் வந்து பலரைக் கவர்ந்தவர் நாகார்ஜுனா. அதனால்தான் அதே போன்ற ஹேர்ஸ்டைலில் அவரைக் 'கூலி' படத்தில் நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். அவருக்குப் பிறகு அந்த ஹேர்ஸ்டைலில் மயங்கியவர் பிரதீப் ரங்கநாதன். இது குறித்து நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தெலுங்கு' நிகழ்ச்சியில் 'டியூட்' படத்திற்காக அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட போது பேசியுள்ளார்.
“நான் பள்ளியில் படிக்கும் போது, 'ரட்சகன்' படத்தில் நாகார்ஜுனா சாரின் ஹேர்ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு, அதே பன்க் ஹேர்கட் செய்தேன். ஆனால், என் அம்மா என்னை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. பின்னர், நான் அவரிடம் கெஞ்சினேன், சில நண்பர்களுக்கும் பள்ளியில் உள்ள பெண்களுக்கும் காட்டிய பிறகு அதை வெட்டிவிடுவேன் என்று. இப்போது, என் அம்மா என்னிடம் கேட்க முடியாது. ஆகவே, நான் நாகார்ஜூனா சாரைப் போல முடியை வளர்த்து வருகிறேன்,” என்று கூறியுள்ளார்.