ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாக அக்டோபர் 17ம் தேதியே புதிய படங்கள் வெளியாகின்றன. அறிவிப்பின்படி ''பைசன், கார்மேனி செல்வம், டீசல், டியூட், கம்பி கட்ன கதை” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அவற்றில் முக்கியமாக இளம் ஹீரோக்கள் நடித்துள்ள 'பைசன், டீசல், டியூட்' ஆகிய படங்களுக்கு இடையேதான் போட்டியே உள்ளது. முன்னணி நடிகர்கள் இல்லாத ஒரு தீபாவளியாக இந்த வருடம் இருக்கப் போகிறது. இருந்தாலும் இளம் ஹீரோக்கள் என்ன மாதிரியான வெற்றியைப் பெறப் போகிறார்கள் என்பதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
பைசன்

'பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை' என விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ஐந்தாவது படம். நடிகர் விக்ரமின் மகன் இந்தப் படத்திற்காக ஐந்து வருடங்கள் காத்திருந்து, பல பயிற்சிகளுக்குப் பிறகு படத்தில் நடித்துள்ளார். அவருக்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும் என்று பெரிதும் நம்புகிறார். அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுதிப, லால், அமீர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இளம் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கிராமத்துப் பின்னணி படத்திற்கு இசையமைத்து தனக்கு ஒரு திருப்புமுனை வரும் என காத்திருக்கிறார்.
கார்மேனி செல்வம்

ராம் சக்ரி இயக்கத்தில், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், லட்சுமிப்ரியா, அபிநயா, கார்த்திக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம். ஒரு 'பீல் குட் பேமிலி மூவி' என்பதற்கான உணர்வு படத்தின் டீசரைப் பார்க்கும் போது ஏற்படுகிறது. சமுத்திரக்கனி கதையின் நாயகனாக இதற்கு முன்பும் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கூடுதல் பலமாக கவுதம் மேனனும் இணைந்திருக்கிறார். கதை சார்ந்த இப்படியான படங்கள் சமயங்களில் அதிகம் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. இம்மாதிரியான படங்களையும் ரசிகர்கள் கவனித்து ஆதரவளித்தால் தான் சினிமா நீடித்து நிலைக்கும்.
டீசல்

ஜிவி பிரகாஷ்குமார், சரத்குமார் நடித்த 'அடங்காதே' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சண்முகம் முத்துசாமி. படம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் வெளிவராமல் உள்ளது. ஓரிரு வாரங்களுக்கு முன்பு வெளியாகும் என்றார்கள். மீண்டும் சிக்கல், மீண்டும் முடக்கம். அப்படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள படம்தான் 'டீசல்'. ஹரிஷ் கல்யாண், அதுல்யா, வினய் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படம் பற்றி ரசிகர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிமுகமாகிவிட்டது. திபு நினன் தாமஸ் இசையில் வெளியான 'பீர் சாங்' வெளியான உடனேயே சூப்பர் ஹிட் ஆனது. நிறைய ரீல்ஸ்கள் அப்பாடலை வைத்து வந்துள்ளன. டீசல் கொள்ளை பற்றிய ஒரு அதிரடி படமாக உருவாகி உள்ளது.
டியூட்

அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம். நாயகனாக நடித்த 'லவ் டுடே, டிராகன்' என அடுத்தடுத்து இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்திலும் இளைஞர்களுக்குப் பிடித்த ஒரு கதை, கதாபாத்திரத்துடன் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இந்தப் படமும் வெற்றி பெற்றால் அவருக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடம் கிடைத்துவிடும். டிரைலருக்கும், பாடல்களுக்கும் ஏற்கெனவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குனர், இசையமைப்பாளர், நாயகன், நாயகி என இளம் கலைஞர்களின் கூட்டணி இளைஞர்களைக் குறி வைத்துள்ளது. வச்ச குறி தப்பாது என்றே கோலிவுட்டில் சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.
கம்பி கட்ன கதை

ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் சதீஷ் செல்வம் இசையமைப்பில் நட்டி, சிங்கம் புலி, முகேஷ் ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம். 'சதுரங்க வேட்டை' படத்தில் ஒரு ஏமாற்றுக்காரனாக நடித்த கதாபாத்திரம் போலவே இந்தப் படத்திலும் நட்டி நடித்திருக்கிறார். இரண்டு நிமிடம் உள்ள டிரைலரைப் பார்க்கும் போதே நீண்ட நேரம் பார்ப்பது போல இருக்கிறது. இரண்டு மணி நேரப் படமாக விறுவிறுப்பாகவே கொடுத்திருப்பார்கள் என்று நம்புவோம். இளம் ஹீரோக்களின் படங்களுக்கு மத்தியில் இந்தப் படத்திற்கு எந்த ரசிகர்கள் வருவார்கள் என்பது படம் வெளிவந்ததும் தெரிய வரும்.
இந்த வருட தீபாவளிக்கு வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை நிலவரத்தைச் சொல்கிறார்கள். மழையை மீறி தியேட்டர்கள் பக்கம் மக்கள் வர வேண்டும். ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் ஏதாவது ஒரு படம் அதிக வரவேற்பைப் பெற்றுவிடும். அப்படி இந்த வருடம் எந்தப் படம் பெறப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆர்வமாகத்தான் இருக்கிறது.