விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சினிமா இயக்குனராக இருந்த சீமான் அரசியல் களத்திற்கு சென்ற பின் படங்களை இயக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சில படங்களில் நடிக்க மட்டும் செய்கிறார். அது சமயங்களில் சிறப்பு வேடங்களாகவும் இருக்கும் அல்லது படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களாக இருக்கும். தற்போது தர்மயுத்தம் என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆர்கே சுரேஷ், அனு சித்தாரா, இளவரசு, எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதை ஆர் சுப்ரமணியன் இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஆதம் பாவா தயாரித்துள்ளார்.
இதுபற்றி தயாரிப்பாளர் ஆதம் பாவா நமக்கு அளித்த பேட்டியில், ‛‛இது ஒரு கிரைம் திரில்லர் கதை. சேவற்கொடி படத்தை இயக்கிய சுப்ரமணியன் இயக்குகிறார். போலீஸ் உதவி கமிஷனராக சீமான் வருகிறார். தீர விசாரிப்பதே மெய் என படத்தின் தலைப்பில் அடைமொழி கொடுத்துள்ளோம். அது தான் படத்தின் அடிநாதம். படத்தில் ஒரு துளி கூட அரசியல் இருக்காது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இன்னும் தேதி முடிவாகவில்லை, விரைவில் அறிவிப்பு வரும்'' என தெரிவித்தார்.
இதே தலைப்பில் 1979ல் ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் ஆர்சி சக்தி இயக்கத்தில் தர்மயுத்தம் என்ற படம் வெளிவந்தது. அதே தலைப்பில் இப்போது சீமான் படம் தயாராகி வருகிறது.