படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

காமெடியன்கள் ஹீரோவாவதன் அடுத்த கட்டமாக இரண்டாம் வரிசை காமெடி நடிகர்கள்கூட ஹீரோவாகி வருகிறார்கள். காளி வெங்கட், அப்புகுட்டி, ரோபோ சங்கர் வரிசையில் அடுத்து கதை நாயகன் ஆகியுள்ளார் முனீஷ்காந்த்.
ராமதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் 'முண்டாசுப்பட்டி' படத்தில் சினிமா வாய்ப்பு தேடுவதற்காக தனது பெயரை முனீஷ்காந்த் என்று மாற்றிக் கொள்ளும் கேரக்டரில் நடித்தார். அந்த படமும், இவரது கேரக்டரும் நல்ல வரவேற்பை பெறவே தனது பெயரை முனீஷ்காந்த் என்றே மாற்றிக் கொண்டார்.
சூது கவ்வும், ஜிகர்தண்டா, டார்லிங்-2, மாநகரம், டிடி ரிட்டன்ஸ், கேங்கர்ஸ் போன்ற பல படங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் கதையின் நாயகனாகி விட்டார். முனீஷ்காந்துடன் ருத்ரன் பிரவீன், ஷாதிகா, மவுரிஷ் தாஸ், அஷ்வின், நாகராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
லோகேஷ் குமார் இயக்கும் இந்த படம் கிராமத்து பின்னணியில் முழுமையான 'டார்க் காமெடி' படமாக தயாராகிறது. இதுகுறித்து லோகேஷ்குமார் கூறும்போது, ''எளியவர்களுக்கு எளிதாக கிடைக்கும் கந்து வட்டி எப்படி அவர்களின் கழுத்தை நெருக்குகிறது? என்பதே கதைக்களம். சிரிப்போடு, சிந்திக்க வைக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறோம். படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும்'', என்றார்.