குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை |
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ராம்தாஸ், 'முண்டாசுபட்டி' படத்தின் மூலம் வெளியில் அறியப்பட்டார். அந்த படத்தில் அவர் முனீஷ்காந்த் என்ற கேரக்டரில் நடித்ததால் அதுவே அவரது சினிமா பெயராக மாறிவிட்டது. தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வரும் அவர் மாநகரம், கடல், சூது கவ்வும், எனக்குள் ஒருவன், பசங்க 2, ஒரு நாள் கூத்து, லத்தி உள்ளிட்ட பல படங்களில் குணசித்ர வேடங்களிலும் நடித்துள்ளர். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.
தற்போது முதன் முறையாக 'காடப்புறா கலைக்குழு' என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியிருக்கிறார். இன்னொரு நாயகனாக காளி வெங்கட் நடிக்கிறார். காளி வெங்கட் ஏற்கெனவே பல படங்களில் கதை நாயகனாக நடித்து விட்டார். இந்த படத்தை ராஜா குருசாமி என்ற புதுமுகம் இயக்குகிறார். ஹென்றி இசை அமைக்கிறார். வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி சினி புரொடக்ஷன் சார்பில் முருகானந்தம் வீரராகவன், சண்முகப்ரியா முருகானந்தம் தயாரிக்கிறார்கள். இந்தப் படம் கரகாட்டத்தில் ஆடும் ஆண் நடன கலைஞர்களை பற்றிய காமெடி படமாக உருவாகிறது. இதில் ஆண் கரகாட்ட கலைஞராக முனீஷ்காந்தும், நாதஸ்வர கலைஞராக காளி வெங்கட்டும் நடிக்கிறார்கள்.