சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

“அழகிய தீயே, மொழி, அபியும் நானும், காற்றின் மொழி” உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள 'பொம்மை' படம் இந்த வாரம் ஜுன் 16ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்துக்குப் போட்டியாக குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தப் படத்தை விடவும் ஒரு சில சிறிய படங்கள் மட்டுமே வெளியாகிறது. 'எறும்பு, தொலைவில்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அன்றைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்கள் தவிர ஹிந்தி, தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகியுள்ள 'ஆதிபுருஷ்' படமும் ஜுன் 16 வெளியாகிறது. இந்தப் படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுகிறார்கள். தமிழகத்திலும் இப்படத்தை நிறைய தியேட்டர்களில் வெளியிட முயற்சித்து வருகிறார்கள். ஆனால், தமிழில் இப்படத்திற்காக இதுவரையிலும் எந்த விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இன்னும் சில நாட்களில் படம் வெளியாக உள்ளதால் நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இப்படத்தை ஹிந்தி, தெலுங்கில் மட்டும் தயாரித்துள்ளதால் அங்கு அதிக புரமோஷன்களை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் ஜுன் 9ம் தேதி வெளியான படங்களில் 'போர் தொழில்' படத்திற்கு மட்டும் வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த வாரம் ஜுன் 23ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளது. ஆனால், அவை சிறிய பட்ஜெட் படங்கள்தான். ஜுன் 29ம் தேதி 'மாமன்னன்' படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.