ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! |

வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள்.
ஆனால், தமிழைத் தவிர மற்ற மொழிகளில் இப்படம் கடும் போட்டியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. தெலுங்கில் ஜனவரி 9ம் தேதி பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படம் வெளியாகிறது. அந்தப் படமும் பான் இந்தியா படம் என்பதால் விஜய்யை விட பிரபாஸ் பான் இந்தியா பிரபலம் என்பதால் அப்படத்திற்கே தெலுங்கு, ஹிந்தியில் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள 'மன ஷங்கர வர பிரசாத் காரு, நவீன் பொலிஷெட்டி நடித்துள்ள 'அனகனகா ஒக ராஜு', ரவி தேஜா நடித்துள்ள 'பர்தா மஹாசயுலகு விக்ஞாபதி', ஷர்வானந்த் நடித்துள்ள 'நாரி நாரி நடுமா முராரி' ஆகிய படங்களும் சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகின்றன.
விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். அவ்வளவு செலவு செய்து பான் இந்தியா அளவில் கவனத்தை ஈர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்கேற்ற விதத்தில் தியேட்டர்கள் கிடைத்தால்தான் படத்தின் வசூல் நன்றாக இருக்கும். அதற்கு படக்குழு என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.