நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால் நடித்து கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த 'அஞ்சான்' படம் ரீ எடிட் செய்யப்பட்டு இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகிறது. அது குறித்து இயக்குனர் லிங்குசாமி பேசியது: முதல்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் அஞ்சான் தான். இப்போது பலர் சிக்கினாலும் முதன்முதலில் சிக்கியது நான்தான். ஆனால், இன்னமும் உண்மையாக ரசித்த பலர் இருக்கின்றனர். இது உலகை திருப்பி போட்ட படம் இல்லை. ஆனாலும் சூர்யா ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தது. அவர்களுக்கு மட்டும்தான் அந்த படம். அதனால் மீண்டும் வெளியிடுகிறோம்.
எல்லோருடைய கருத்துக்களை வைத்து ஒரு எடிட் செய்துள்ளோம்.. ஆகஸ்ட் 15ல் வெளியிட நேரம் இல்லை. இப்போது வருகிறது. இரண்டு ஆண்டுகள் இந்த பணி நடந்தது.. அஞ்சான் பார்ட் 2 வருமா என்றால் வரட்டும் என்பேன். 2 மணி 36 நிமிடங்கள் இருந்த படம் 36 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.. படத்தில் சூரி இல்லை, சூர்யா மட்டும்தான் இருக்கிறார்.. சிவக்குமார் மட்டும் படம் பார்த்தார்.. சூர்யா ஊட்டியில் இருக்கிறார்.. சந்தர்ப்பம் கிடைத்தால் சூர்யா படம் பார்ப்பார்.
மகாபாரதம் படம் இயக்க வேலை நடந்தது.. ஆனால் பட்ஜெட் காரணமாக அது நடக்கவில்லை. அடுத்து என் படத்தில் வித்யாசாகர் பையன் நாயகனாக நடிக்கிறார். பெரிய படம், சின்ன படம் என்பது படத்தின் கன்டென்ட் வைத்துதான் முடிவாகிறது. சூர்யா மீது வன்மத்துடன் சிலர் இருக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை. நானும் தவறு செய்திருக்கிறேன். பலர் அதனை பலமடங்கு ஆக்கிவிட்டனர்.
இப்போது மணிரத்னம், ஷங்கர் என ட்ரோலில் சிக்காதவர்களே இல்லை. நாங்களே சில முறை ஏமாந்து விடுகிறோம். உங்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதுவும் ஒரு அனுபவம். அஞ்சான் சமயத்தில் மொத்த வித்தையை இறக்கி வைத்து இருக்கிறேன் என சொன்னேன். அது பிரச்னை ஆனது.
ஒரு வார்த்தையில் படத்தை காலிபண்ண முடியுமா என்ன? நான் சொன்ன வார்த்தையை சிலர் பயன்படுத்திக் கொண்டனர். கிராமத்தில் இருந்து வந்த ஒருவன் தைரியமாக ஒரு வார்த்தை சொல்வதில் என்ன தவறு. இதில் என்ன ஓவர் கான்பிடென்ட் இருக்கிறது. அந்த வார்த்தை தவறாக பயன்படுத்தப்பட்டது. பண்ணியது யார் என்றும், பண்ண சொன்னது யார் என்றும் தெரியும்.
ஆனந்தம் படம் பார்த்து அழாதவர்கள் உண்டா? அப்படி அழாதவர்கள் மனசு இல்லாதவர்கள். நான் படம் தயாரிப்பில் இறங்கியதால் தோல்வி அடையவில்லை. திசை மாறவில்லை. ஏ.வி.எம் தொடங்கி பலரும் டைரக்ஷன், தயாரிப்பு என ஜெயித்து இருக்கிறார்களே. ரஜினிகாந்த் படம் பண்ண கதை என்னிடம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.