லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சண்டை இயக்குனர்கள் படம் இயக்குவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் படம் இயக்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அனல் அரசு. முன்னணி சண்டை இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அனல் அரசு 2004ம் ஆண்டு 'அருள்' படத்தின் மூலம் சண்டை இயக்குனர் ஆனார். அதன்பிறகு 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றினார். சிங்ககுட்டி, ராஜபாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார். அடுத்து அவர் இயக்குனர் ஆகிறார். தற்போது படத்தின் பணிகளை துவங்கி உள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படமாக இது உருவாகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை தற்போது நடத்தி வருகிறார். வருகிற 16ம் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடிகர், நடிகை தேர்வு நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.