பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. வசந்த மாளிகை படத்தின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர். எம்.ஜி.ஆருடன் கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், தலைவன் படங்களில் நடித்தார். சிவாஜியுடன் வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம், குலமா குணமா, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, ரோஜாவின் ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 74 வயதாகும் வாணிஸ்ரீ 1978ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
ஏற்கெனவே பல விருதுகளை பெற்றுள்ள வாணிஸ்ரீக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இந்த பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் வீரேந்தர் சிங் சவுகான் வழங்கி கவுரவித்தார்.