'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் |
சக்தி சினி புரொடக்ஷன் சார்பில் டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிக்கும் படம் 'காடப்புற கலைக்குழு'. அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கி உள்ளார். முனீஸ்காந்த், காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில் உருவாகி உள்ள படம் வருகிற 7ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் முனீஸ்காந்த் பேசியதாவது : இந்தப்படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம். அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குநர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நான் இந்த படத்தில் முறையாக பயிற்சி பெற்று கரகாட்டம் ஆடியிருக்கிறேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. என்றார்.
முன்னதாக முனீஸ்காந்த் நடன கலைகுழுவினருடன் இணைந்து மேடையில் கரகாட்டம் ஆடி காட்டினார்.
நடிகர் காளி வெங்கட் பேசியதாவது: எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் முனீஷ்காந்துடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவருக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார். என்றார்.