ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'பாட்னர்'. ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். ராயல் பார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரோபோ சங்கர் கலந்து கொண்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொஞ்சம் உடல்நலம் தேறிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவசரமாக விமானத்தை பிடிக்க வேண்டும் என்று கூறிய அவர் நிகழ்ச்சியின் முதல் ஆளாக பேசினார்.
அப்போது அவர், நடிகை ஹன்சிகா மெழுகு பொம்மை போன்று இருப்பதாகவும். ஹன்சிகா காலை தடவுற மாதிரி ஒரு சீன் படத்துல இருந்தது. ஒரு பொருளை தேடி முட்டிக்கு கீழ் கால தடவ வேண்டும். அந்த காட்சியில் நடிக்க வைக்க நானும் போராடி பார்த்தேன். ஆனால் முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் டைரக்டரும் கால்ல விழுந்தெல்லாம் கெஞ்சினோம். எல்லாமே ஹீரோக்களுக்குதான் கிடைக்கிறது. காமெடியன்களுக்கு கிடைப்பதில்லை என்று பேசினார். ரோபோ சங்கர் பேசும்போது எதிரே முதல் வரிசையில் அமர்ந்து அவரது மகள் இந்திரஜாவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுவெளிக்கு வந்துள்ள ரோபோ சங்கர் தன் உடல்நிலை குறித்து பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஹன்சிகாவின் உடலை பற்றி பேசியது குறித்து பத்திரிகையாளர் தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ரோபோ சங்கர் சார்பில் ஜான் விஜய் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினார். இதற்கு முன்பும் இதே போன்று ஒரு முறை மேடையில் ஆபாசமாக பேசி எதிர்ப்பை சம்பாதித்தார் ரோபோ சங்கர்.