ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு வேலாயுதம், சிங்கம்- 2, மான்கராத்தே, வாலு என பல படங்களில் நடித்தார். சிம்புவுடன் வாலு படத்தில் நடித்து வந்தபோது அவர்கள் இருவரும் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டார்கள். ஆனால், கடைசி நேரத்தில் அந்த திருமணம் தடைபட்டது.
இந்த நிலையில் 2022ம் ஆண்டில் தனது தோழியை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா. ஆனால் திருமணமாகி 3 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது சோஹைல் கத்தூரியாவை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம் ஹன்சிகா. ஆனால் சமீபத்தில் இதை சோஹைல் மறுத்தார்.
இந்நிலையில் சோஹைல் உடன் இருந்த திருமண போட்டோ மற்றும் இருவரும் ஜோடியாக இருந்த போட்டோக்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார் ஹன்சிகா. மேலும் அவரை அன்பாலோவும் செய்துள்ளார். இதனால் இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது தீவிரமாகி உள்ளது. அதுமட்டுல்ல விவாகரத்து கோரி ஹன்சிகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.




