ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் பற்றிய தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. லோகேஷ் கனகராஜ் அப்படத்தை இயக்குவார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், அது குறித்து உறுதியான தகவல் இல்லை. இன்னும் இயக்குனர் முடிவு செய்யப்படவில்லை என ரஜினிகாந்த் கூறியிருந்தார். அதன்பின் பிரதீப் ரங்கநாதன் அப்படத்தை இயக்குவார் என்றும் ஒரு பேச்சு வந்தது.
ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து பிரதீப், “அப்படத்தை நான் இயக்கவில்லை. நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்துவதைத்தான் பார்க்கிறேன். இப்போது அது பற்றி அதிகம் பேச முடியாது,” என்று கூறியுள்ளார். அதனால், அவர் அந்தப் படத்தின் இயக்குனர் பட்டியலில் இல்லை.
மேலும், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் வெளியான பின்பு, பிரதீப் அவரே இயக்கிய, நாயகனாக நடிக்கும் படத்தைத்தான் ஆரம்பிக்க உள்ளாராம். ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக அப்படம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதீப் நடித்துள்ள 'டியூட்' அக்டோபர் 17ம் தேதியும், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் டிசம்பர் 18ம் தேதியும் வெளியாக உள்ளது.




