தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் ஆரம்பமாகி பின் கென்யாவிலும் நடக்கிறது.
இப்படத்தின் தலைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். கடந்த சில நாட்களாக இப்படத்தின் தலைப்பு குறித்து டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. படத்திற்கு 'வாரணாசி' என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான ஆன்மிக நகரம் வாரணாசி. அந்நகரை காசி என்றும் அழைக்கிறார்கள். உலக அளவில் பிரபலமான காசி விஸ்வநாதர் கோயில் அங்கு அமைந்துள்ளது. விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவன் என்றும் அர்த்தம்.
ராஜமவுலி - மகேஷ்பாபு படம் குறித்து இதற்கு முன்பு வெளியான ஒரு அப்டேட்டில் நந்தி, திரிசூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்ட ஒரு மணியை கழுத்தில் அணிந்த முகத்தைக் காட்டாத ஒருவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். அது நாயகன் மகேஷ்பாபுவின் புகைப்படமாகத்தான் இருக்கும் என்பது அனைவராலும் யூகிக்க முடிந்த ஒன்று.
படத்தில் ஆன்மிகத் தொடர்பு நிச்சயம் இருக்கும் என்பதை அது உறுதிப்படுத்தியது. 'வாரணாசி' என்ற பெயரும் படத்தை உலக அளவில் கொண்டு போய் சேர்க்கும் என்பதால் தேர்வு செய்துள்ளதாக ஒரு தகவல். இப்படி வெளியாகி உள்ள தகவல் உண்மைதானா என்பது ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.