ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதியை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்ட போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என கடந்த ஐம்பது நாட்களாக திரையுலகினர் கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசும் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் 100 சதவீத இருக்கை அனுமதியை அரசு வழங்கியதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. திரையுலகினரில் அனைவருமே இந்த 100 சதவீத அனுமதியை ஆதரித்து தொடர்ந்து பேசி வருகின்றனர்.
நடிகை குஷ்பு, “தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களை வழங்குவது முதன்மையான பொறுப்பாக இருக்கும். இதில் மாற்றுக் கருத்துள்ளவர்கள் தயவு செய்து தியேட்டர்களுக்குப் போக வேண்டாம்,” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் சிலர், வெளி இடங்களில் மக்கள் நடமாடும் போது அவ்வளவாக பிரச்சினை வராது. ஆனால், மூடப்பட்ட அரங்கிற்குள் மூன்று மணி நேரம் எந்த சமூக இடைவெளி இல்லாமல் அமர்வது கொரானோ பரவலுக்கு வழி வகுக்கும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதனால், நேற்று அரசு உத்தரவிட்ட பிறகு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். மக்களின் மனநிலை என்னவென்பதை 'மாஸ்டர், ஈஸ்வரன்' ஆகிய புதிய படங்கள்' வெளிவந்த பிறகு அதற்கு மக்கள் வருகை புரிவதை வைத்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மக்களின் தீர்ப்பை இதில் இறுதியான தீர்ப்பு என்பது மட்டும் உறுதி.